இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை பொருத்தமற்றதாக, கேலிக்குரிய வகையில் அமைத்திருக்கிறார்கள் என்று இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆன்டர்ஸன் கடுமையாகச் சாடியுள்ளார்
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவுடனான இங்கிலாந்து அணி மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முட்டாள்தனமாக பட்டியலிடப்பட்டுள்ளது. 6 வாரங்களில் 5 டெஸ்ட் போட்டிகள் நடத்துமாறு பட்டியல் அமைக்கப்பட்டுள்ளது கேலிக்குரியதாகவும், பொருத்தமற்றதாகவும் இருக்கிறது.
இதுபோன்ற பட்டியல், வீரர்களுக்குக் கூடுதல் அழுத்தம் கொடுப்பதாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் இருக்கும். இதுபோன்ற குழப்பமான பட்டியலால், நான் லான்காஷையர் அணிக்காகக் கூட விளையாட முடியாமல் போகலாம். இதுபோன்று பட்டியல் அமைத்தவர்களை நினைத்து நான் வெட்கப்படுகிறேன் என்றார்.



