காபூலில் அரசு கட்டிடம் மீது நடத்தப்பட்ட தற்கொலை குண்டு வெடிப்பில் 12 பேர் பலியாகி உள்ளனர் என்றும், 31 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரமதான் பண்டிகையை கொண்டாட இந்த அலுவக ஊழியர்கள் அலுவகத்தில் இருந்து சென்றுள்ள நிலையில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய சுகாதார அமைச்சக செய்தி தொடர்பாளர், இந்த தாக்குதல் கிராம மறுவாழ்வு மற்றும் மேம்பாட்டு அமைச்சக நுழைவு வாயிலில் நடத்தப்பட்டுள்ளது என்றார்.



