திரிபுரா கவர்னர் விடுமுறையில் சென்றதால் மேற்குவங்க கவர்னர் திரிபுராவின் கவர்னராக கூடுதல் பொறுப்பேற்றார். திரிபுரா கவர்னராக இருந்த தத்தக்டா ராய், குடும்ப விஷயமாக வெளிநாடு சென்றுள்ளார். இதையடுத்து மேற்குவங்க கவர்னராக உள்ள கேசரிநாத் திரிபாதியை திரிபுரா கவர்னராக கூடுதல் பொறுப்பு அளித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த 6-ம் தேதி உத்தரவிட்டார். கூடுதல் பொறுப்பேற்கும் விழா ராஜ்பவனில் நடந்தது. திரிபுரா தலைமை நீதிபதி அஜய் ரஸ்தோகி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதில் திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேவ் அவரது அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Popular Categories




