ரஷ்யாவில் உலகக் கோப்பை கால்பந்து போட்டி தொடங்கி உள்ள நிலையில், அஞ்சல்துறை சார்பில் கால்பந்து மற்றும் ரஷ்யா என்ற கருத்தின் அடிப்படையில் அஞ்சல்தலை கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், பிரபல கால்பந்து வீரர் பீலே உள்ளிட்ட பிரபலமான வீரர்களின் அஞ்சல்தலைகள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து, சென்னை நகர மண்டல அஞ்சல்துறை தலைவர் ஆர்.ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘சென்னை, அண்ணா சாலை தலைமை அஞ்சலக வளாகத்தில் உள்ள முதல் மின்சார திரை யரங்கக் கட்டிடத்தில் நிரந்தர தபால்தலை கண்காட்சி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதில் கால்பந்து தயாரிக் கப் பயன்படும் பொருட்களால் தயாரிக்கப்பட்ட தபால்தலைகள் மற்றும் பிரபல கால்பந்து வீரர்களான பீலே உள்ளிட்ட புகழ்பெற்ற கால்பந்து வீரர்களின் தபால்தலைகளும் கண்காட்சி யில் இடம் பெற்றுள்ளன என்றார்.
சென்னையில் உலகக் கோப்பை கால்பந்து தபால் தலை கண்காட்சி
Popular Categories



