தென் அமெரிக்க நாடான பொலிவியாவின் போட்டோசி அருகே நெடுஞ்- சாலையில் நேற்று 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பேருந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, பெரிய பாறையில் மோதியது. இதில் பஸ்சின் முன்புறம் நொறுங்கியது. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இவ்விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். 30 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.




