ஹாலே ஓபன் டென்னிஸ் அரையிறுதிக்குத் தகுதி பெற்றார் ரோஜர் பெடரர்

ஜெர்மனியின் ஹாலே வெஸ்ட்ஃபாலன் நகரில், க்ராஸ்கோர்ட் ஹாலே ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

நேற்று நடைபெற்ற காலிறுதிப்போட்டியில் உலக தரவரிசையில் 60 இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென்-ஜ 7-6 (7/2) 7-5 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தினார். இது அவருக்கு 19-வது தொடர்ச்சியான வெற்றியாகும். உலகின் நம்பர் ஒன் வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் தனது தொடர்ச்சியான வெற்றி மூலம் 10-வது சாம்பியன் பட்டத்தைப் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்து நடைபெற உள்ள அரையிறுதிச் சுற்றில் பெடரர், அமெரிக்க வீரர் டேனிஸ் குட்லா-வை எதிர் கொள்கிறார்.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.