பெரியமணலி கோட்டபாளையத்தில், நாளை மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது. எலச்சிபாளையம் ஒன்றியம், பெரியமணலி கிராமம், கோட்ட பாளையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மகா மாரியம்மன், சித்தி விநாயகர் கோவிலில், கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. நேற்று காலை, 8:00 மணிமுதல், இரவு, 8:00 மணி வரை காவிரி தீர்த்தம் கொண்டு வருதல், விநாயகர் பூஜை, யஜமான சங்கல்பம், புண்யாக வாஸ்துசாந்தி, வேதிகார்ச்சனை, முதல்கால யாக பூஜை, தீபாராதனை, விநாயகர்சிலை பிரதிஷ்டை, தண்ணீர் ஊற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இன்று அதிகாலை, 4:00 – 5:00 மணிக்கு விநாயகர் பூஜை, இரண்டாம் கால யாக பூஜை, யாத்ராதானம், கடம் புறப்பாடு, 5:00 – 6:00 மணிக்கு சித்தி விநாயகர், மகா மாரியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடைபெறும்
இன்று மகா மாரியம்மன் கோவில் குடமுழுக்கு
Popular Categories



