இன்று முதல் தடங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் செயல்படத் தொடங்கும் என தருமபுரி மாவட்ட முதன்மை நீதிபதி ஏ. கந்தகுமார் அறிவித்துள்ளார்.”
தருமபுரி மாவட்டத் தலைமையிடத்தில் செயல்படும் அனைத்து நீதிமன்றங்களுக்கும் தடங்கத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டுமானப் பணிகள் கடந்த ஓராண்டுக்கு முன்பு நிறைவடைந்தன. உள்கட்டுமானப் பணிகளுக்காக, முழுமையான செயல்பாடு தொடங்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில், மாவட்ட முதன்மை நீதிபதி ஏ. கந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, தருமபுரி வட்டத்தில் இயங்கும் அனைத்து நீதிமன்றங்களும் இன்று முதல் தடங்கம் வளாகத்தில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



