சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் 94% பேர் டிஜிட்டல் முறையில் அபராதம் செலுத்த தொடங்கியுள்ளனர் என்று சென்னை போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், போக்குவரத்து விதி மீறலுக்கான டிஜிட்டல் முறையில் ரோக்கமில்லா அபராதம் வசூல் செய்யும் முறை கடந்த மே மாதம் 10ம் தொடங்கப்பட்டது. இந்த முறை தொடங்கப்பட்டது முதல் ஜூலை 15ம் தேதி வரை 3 கோடி டிஜிட்டல் முறையில் அபாரதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



