பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாலியல் கொடுமைகள் குறித்து துணிச்சலாக புகார் அளிக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்.
மேலும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை பொன் ராதாகிருஷ்ணன் கூறக்கூடாது என்று குறிப்பிட்டார்.



