ரூ.200 கூட வாங்காம எங்கிருந்துடா கெளம்புறீங்க…?! #GoBackStalin

சற்றுமுன்

stalin mk - 2026

ரூ.200 கூட வாங்காம நீங்கள்லாம் எங்கிருந்துடா கெளம்புறீங்க…? என்று கேட்கும் வகையில், இப்போது மு.க.ஸ்டாலினுக்கு எதிராக டிவிட்டர் ட்ரெண்டை உருவாக்கியிருக்கிறார்கள் டிவிட்டர்வாசிகள்.

மு.க.ஸ்டாலின் விம்பிள்டன் போட்டி, கிரிக்கெட் மேட்ச் எல்லாம் பார்க்க லண்டனுக்குச் சென்றிருக்கிறார். சென்னையில் ஐபிஎல் போட்டி நடக்கக் கூடாது என்று சென்னை ரசிகர்கள் எவரையும் மேட்ச் பார்க்க விடாமல் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டு, லண்டனுக்குச் சென்று இந்திய அணி விளையாடும் மேட்ச் பார்க்க சென்றுவிட்டார் என்று வலைத்தளவாசிகள் பொருமித் தள்ளுகிறார்கள். அவை எல்லாவற்றையும் விட இந்த ஒரு வாரமாக தமிழகம் அமைதிப் பூங்காவாக, ஒழுங்குடன் இருக்கிறது, பிரெக்கிங் கிரேக்கிங் இல்லாமல், ஊடகங்கள் பிரேக் டான்ஸ் ஆடாமல் அமைதியாக தமிழ்நாடு இருக்கிறது  என்றால் பாருங்களேன்… என்று கூறும் எதிர்த் தரப்பினர், இப்போது டிவிட்டரில் ஆக்கியிருக்கும் ட்ரெண்டுதான் #GoBackStalin

அட நாம தான் 200 ரூவா கொடுத்து டிரெண்டிங் பண்ணுவோம்! அந்த பாவம் தான் இப்போதைய – என்ற ரீதியில் டிவிட்டர் கருத்துகள் தூள் பறக்கின்றன!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.