சேலம் மேட்டூர் அணை பாசனத்திற்காக திறக்கப்பட்டது. 85வது ஆண்டாக மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தண்ணீரை திறந்து விட்டார். முதல்வர் பொறுப்பு வகிப்பவர், நீர்திறந்து விடுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக, அங்குள்ள அணைகள் நிரம்பியுள்ளன. இதனால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளின் பாதுகாப்பு கருதி ஒரு லட்சத்து 20 ஆயிரம் கனஅடிக்கு மேல் உபரிநீர் காவிரியில் வெளியேற்றப்பட்டது. இந்த உபரிநீர் வரத்து காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
நேற்று நிலவரப்படி 1 லட்சத்து 7 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. காவிரியில் வெள்ளப்பெருக்கு இதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஐந்தருவி, மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்டவை முழுவதும் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் இன்று 11வது நாளாக ஒகேனக்கல்லில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் நீர் வரத்து தண்ணீர் பெருக்கெடுத்து செல்வதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேறி வருகின்றனர்.
இதேபோல், மேட்டூர் அணைக்கு ஒரு லட்சம் கனஅடிக்கு மேல் நீர் வந்துக்கொண்டிருக்கிறது. இதனால் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று மாலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 106 அடியை தாண்டியது. 1000 கனஅடி திறப்பு அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர்இருப்பு 73.13 டிஎம்சியாக உள்ளது



