தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி 1 லட்சத்து 18 ஆயிரம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டுக்கு 5 ஆயிரம் பேர் என்ற அளவில் புதிதாக இந்நோய் உருவெடுத்து வருவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 18 ஆயிரம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகள் மூலம் சிகிச்சை பெற்று வருவதாக தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. இதுமட்டுமல்லாமல் 8 ஆயிரம் பேர் வெளியிடங்களில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களையும் அரசின் சிகிச்சை வளையத்திற்குள் கொண்டுவர முழுவீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகரிப்பு
Popular Categories



