புதுக்கோட்டைக்கு வருகை தந்துள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டிய திமுகவினர் 677 பேர் கைது செய்யப்பட்டனர். புதுக்கோட்டைக்கு இன்று வருகை தந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அங்குள்ள விருந்தினர் மாளிகையில் தங்கினார். பின்னர், அங்கிருந்து புதிய பேருந்து நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அதன்பிறகு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் நரிமேட்டில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுமானப் பணிகளை ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டிய திமுகவினர் 677 பேர் கைது
Popular Categories



