டீசல் விலை உயர்வு, சுங்க கட்டண உயர்வு, 3 ம் நபர் காப்பீட்டு கட்டண உயர்வை குறைக்க கோரி நாடு முழுவதும் இன்று லாரிகள் ஸ்டிரைக் துவங்கி உள்ளது. இதனால் முக்கிய தொழில் நகரமான திருப்பூரில் நாள் ஒன்றிற்கு 100 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக திருப்பூர் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் ராமசாமி தெரிவித்துள்ளார். திருப்பூரில் மட்டும் 8,000 லாரிகள், 8,000 வேன்கள் இந்த ஸ்டிரைக்கில் பங்கேற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கறிக்கோழி, ஜவுளி பொருட்கள் தேக்கம் காரணமாக ரூ.100 கோடி அளவிற்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதே போன்று கரூர் மாவட்டத்தில் 10 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோகப் பொருட்கள், ஜவுளிகள், கொசு வலை உள்ளிட்டவைகள் தேக்கம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ரிகள் வேலைநிறுத்தம் காரணமாக நீலகிரி மாவட்டம் ஊட்டியில், 22 கிடங்களில் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள தேயிலை தேங்கியுள்ளன. நாமக்கல்லில் 5 கோடி ரூபாய் வர்த்தகம் முடங்கியுள்ளது.
லாரிகள் ஸ்டிரைக்கால் ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்பு
Popular Categories



