லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் 4-ம் நாளாக நீடிப்பதால் தமிழகம் முழுவதும் காய்கறி விலை உயர்ந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை 10% அளவுக்கு உயர்ந்துள்ளது. தக்காளி, உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், பாகற்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது மக்கள் கடுமையாக அவதியடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள சுங்க சாவடிகளை அகற்றிவிட்டு ஆண்டுக்கு ஒரு முறை லாரி உரிமையாளர்கள் சுங்க கட்டணம் செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். டீசல் விலையை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வர வேண்டும். மேலும் 3-ம் நபர் விபத்து காப்பீட்டு பிரிமியம் உயர்வை குறைக்க வேண்டும் போன்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 20-ம் தேதி முதல் நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுப்பட்டனர்.
இதன் காரணமாக தமிழகத்தில் சுமார் 4 லட்சம் சரக்கு வாகனங்கள் இயக்கப்படாததால், 7 லட்சம் டிரைவர்கள் கடந்த 4 நாட்களாக வேலையிழந்துள்ளனர். இதனால் கோடிக்கணக்கான சரக்குகள் தமிழகம் முழுவதும் தேக்கம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



