பொறியியல் படிப்புகளில் பொதுப்பிரிவினருக்கான ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்துக்குட்பட்ட பொறியியல் கல்லூரிகளில் பி.இ. படிப்பில் சேர ஆன்லைன் கலந்தாய்வு முறை இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் மொத்தம் 1 லட்சத்து 6 ஆயிரத்து 105 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆன்லைன் கலந்தாய்வு மொத்தம் 5 சுற்றுகளாக நடைபெற உள்ளது. இதில் பிளஸ் 2 தேர்வில் கட்-ஆஃப் மதிப்பெண் 200-இல் தொடங்கி, 200-க்கு 190 வரை எடுத்த 10 ஆயிரம் மாணவர்ளுக்கு முதல் சுற்றுக்கான ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கியது.
நேற்று நள்ளிரவு முதல் மாணவர்கள் விரும்பும் பொறியியல் கல்லூரி மற்றும் பாடப் பிரிவை ஆன்லைனில் தேர்வு செய்து கொள்ளலாம். இணையதள வசதி இல்லாத மாணவர்கள் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 42 உதவி மையங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2வது சுற்றில் பங்கேற்க உள்ள 20,000 மாணவர்கள் 30ம் தேதி முதல் ஆன்லைனில் பொறியியல் பாடப்பிரிவை தேர்வு செய்து கொள்ளலாம்.



