இந்தியாவிற்கு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ள விஜய் மல்லையா, சட்டப்படி விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
வங்கிகளிடம் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று விட்டு லண்டனுக்கு தப்பியோடியுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு கொண்டுவர மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே தன்னுடைய பெயரில் இருக்கும் சொத்துகளை ஒப்படைக்க தனக்கு தயக்கமும் இல்லை என்றும், இந்தியாவில் இருக்கும் சொத்துகளின் பட்டியலை கர்நாடகா நீதிமன்றத்தின் முன்பு சமர்ப்பித்து விட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இதனிடையே மல்லையாவின் சொத்துகளை பறிமுதல் செய்யும் வகையிலான அவரச சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்திருந்தது.
இதனால், நிலை குலைந்துள்ள அவர், சட்டப்படி விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும், இந்தியா திரும்ப விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனக்கு நெருக்கமானவர்கள் மூலம், மத்திய அரசின் உயர் அதிகாரிகளுக்கு மல்லையா தூதுவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



