கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என்பக்கம் இருந்து என்னை ஆதரித்து கொண்டிருக்கிறார்கள் என்று அழகிரி கூறினார்.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மு.க.அழகிரி இன்று தனது குடும்பத்தினருடன் அஞ்சலி செலுத்தினார்.பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எனது தந்தையிடம் என் ஆதங்கத்தை வேண்டிகொண்டேன். அது என்ன ஆதங்கம் என்பது இப்போது உங்களுக்கு தெரியாது. தலைவர் கலைஞர் அவர்களின் உன்மையான விசுவாசிகள் எல்லாம் என் பக்கம் தான் உள்ளனர். அவர்கள் என்னை ஆதரித்துக்கொண்டிருக்கின்றனர்.
என்னுடைய ஆதங்கம் கட்சி தொடர்புடையது தான். திமுக செயற்குழு கூட்டம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. நான் தற்போது திமுகவில் இல்லை என்றார்.



