ஏப்.15 முதல் உரிமையியல் நீதிபதி காலிப்பணியிட நேர்காணல் தேர்வு: டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு

tnpsc தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செய்தி அறிவிப்பில்… 2013-2014 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு மாநில நீதிப்பணியில் அடங்கிய உரிமையியல் நீதிபதி பதவியில் அடங்கிய 162 காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பதாரர்களைத் தெரிவு செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், 26.08.2014 ஆம் நாளிட்ட அறிவிக்கை வாயிலாக விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்றிருந்தது. மேற்காணும் பதவிக்கான எழுத்துத் தேர்வு கடந்த 01.11.2014, மற்றும் 02.11.2014 ஆகிய இரு நாட்களில் நடைபெற்றது. மேற்படி பதவிக்கான விண்ணப்பதாரர்களின் இணையதள வழியிலான விண்ணப்பங்களில் தெரிவிக்கபட்டுள்ள விவரங்களை சரிபார்க்கும் பொருட்டும், அவ்விவரங்களின் உண்மைத் தன்மையினை அறியும் பொருட்டும் 04.03.2015 முதல் 11.03.2015 வரை 590 விண்ணப்பதாரர்கள் அழைக்கப்பட்டு அவர்களின் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, நேர்காணல் தேர்வுக்கு 314 விண்ணப்பத்தார்கள் அழைக்கப்பட்டுள்ளனர். மேற்படி நேர்காணல் தேர்வு எதிர்வரும் 15.04.2015 முதல் 21.04.2015 வரை சென்னை பிரேஸர் பாலச் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மேற்படி நேர்காணல் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்ககளுக்கான அழைப்பாணை (Notice of Interview) 314 விண்ணப்பத்தார்களுக்கும் விரைவு அஞ்சல் வாயிலாக அனுப்பப்பட்டுள்ளது. தவிர மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலமாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விவரங்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பத்தார்கள், மேற்படி அழைப்புக் கடிதத்தை தேர்வாணைய இணையதளத்திலிருந்தும் (www.tnpsc.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள், அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நாளில் நேர்காணல் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். மேலும், குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் நேர்காணலுக்கு கலந்து கொள்ள தவறும் விண்ணப்பதார்களுக்கு மறு வாய்ப்பு வழங்கப்படாது. நேர்காணல் தேர்வுக்கு அழைக்கப்பட்டதாலேயே அவர்கள் தெரிவு செய்யப்பட முழுத் தகுதி பெற உறுதி அளிக்கப்பட்டதாக கருத இயலாது. – என்று குறிப்பிடப்பட்டுள்ளது. Tamil Nadu Public Service Commission The Tamil Nadu Public Service Commission in its notification dated 26.08.2014 had invited applications from eligible candidates for selection against 162 vacancies for appointment by direct recruitment to the post of Civil Judge in the Tamil Nadu State Judicial Service,2013-2014. The written examination for the said post was held on 01.11.2014 and 02.11.2014. 590 candidates were called for Certificate Verification held during 04.03.2015 to 11.03.2015, to verify the claims made by them in their on-line applications. After verification of certificates, 314 candidates are shortlisted and summoned for the Oral Test scheduled to be held from 15.04.2015 to 21.04.2015 at the office of the Tamil Nadu Public Service Commission, Frazer Bridge Road, V.O.C. Nagar, Chennai-3. The Notice of Interview has already been sent to all the 314 candidates through Speed Post. They have also been intimated by SMS and E-Mail. The candidates may also download the Notice of Interview from the Commission’s website (i.e. www. tnpsc.gov. in). If the candidates fails to appear for the Oral Test on the designated date and time, they will not be given any further chance to appear for the Oral Test. Summoning for Oral Test should not be construed as a assurance for further process of selection.

Donate to Dhinasari News! Independent journalism that speaks truth to power and is free of corporate and political control is possible only when people start contributing towards the same. Please consider donating towards this endeavour to fight fake news and misinformation.