திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மரியாதை செலுத்தினார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக கடந்த ஜூலை முதல் வாரம் அமெரிக்கா சென்றிருந்தார். இதனிடையே திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி காலமானார். கருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்த விஜயகாந்தால் வர இயலாததால் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்து அமெரிக்காவில் இருந்தபடி வீடியோ மட்டும் அனுப்பியிருந்தார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை மருத்துவ சிகிச்சை முடித்துவிட்டு அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய விஜயகாந்த் விமான நிலையத்திலிருந்து நேரடியாக கருணாநிதி நினைவிடம் சென்று தனது மனைவி பிரேமலதா, உறவினர் சுதீசுடன் சேர்ந்து மரியாதை செலுத்தினார்.



