நெல்லை மாவட்டம் திருக் குற்றால அருவிகளில் நன்றாக தண்ணீர் விழுகிறது. கடந்த சில நாட்களாக, கன மழை பெய்து அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருந்ததால், குளிப்பதற்கு போலீஸார் தடை விதித்திருந்தனர்.
இந்த நிலையில் மழை அளவு குறைந்து, அருவியில் ஓரளவு பதுகாப்பான அளவில் நீர் விழுகிறது.எனவே, ஓரமாக நின்று குளிப்பதற்கு போலீஸார் அனுமதி அளித்தனர். மெயின் அருவியின் பாதுகாப்பு வளைவு நடுப் பகுதியில் அதிக அளவில் தண்ணீர் கொட்டுகிறது. எனவே எச்சரிக்கையுடன் இருந்து குளிக்குமாறு போலீஸார் அறிவுறுத்திய வண்ணம் இருந்தனர்.




