உலகில் புதுசு புதுசாக எதையாவது எக்குத்தப்பாகச் செய்துகாட்டி இது ஒரு சேலஞ்ச் என்று மற்றவரை செய்யத் தூண்டுவது.
இப்போது சமூக வலைத்தளங்களின் புண்ணியத்தில் இத்தகைய சவால்கள் எல்லாம் விரைவில் மக்களிடம் பரவி ஒரு பாப்புலாரிட்டியை அடைந்துவிடுகின்றன.
கிவி சேலஞ்ச் போய் இப்போது லேட்டஸ்டாக பரவி வருவது டெலிஅலி சேலஞ்ச். கைவிரல்களை மடக்கி, இரு துவாரங்களாக இரு இரு விரல்களைக் கோத்து, அதன் வழியே உலகைப் பார்ப்பதுதான் இந்த சவால்.
முற்காலம் தொடங்கி, சூரிய நமஸ்காரம் என்று நம் நாட்டில் இரு கைகளையும் இணைத்து, விரல்களைக் கோத்து, நடுவே துவாரம்போல் காட்டி, அதன் வழியே நடு உச்சி சூரியனைப் பார்த்து மந்திரங்களைச் சொன்னார்கள்.
இப்போது புதிய வடிவில், அது ஒரு கைவிரல்களாக மாறியிருக்கிறது. இந்த சேலஞ்சை இப்போது பலரும் செய்துகாடி, தங்கள் படங்களை, வீடியோக்களை இன்ஸ்டாக்ராம், டிவிட்டர், பேஸ்புக் என போட்டு வருகின்றனர். இந்த சேலஞ்சை எடுத்துக் கொண்டு, சவாலை சரியான படி செய்து காட்டி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றிருக்கிறார் ராய் லட்சுமி! அவர் செய்து காட்டியதைப் பாருங்க… விவரம் புரியும்!
#DeleAlliChallenge let’s see how many of you get this ! ??our beautiful queen @iamlakshmirai via insta story , pic.twitter.com/jE3GwEe8Fg
— Raai Laxmi Big Fan♥ (@Raailaxmibigfan) September 7, 2018




