மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சோழவந்தான் வைகை ஆற்றங்கரையோரமாக அமைந்துள்ள பிரளயநாத சிவன் ஆலயத்தில் செப். 13-ம் தேதி வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு விசாக நட்சத்திரத் திருவிழா நடைபெறுகிறது.
இக் கோயிலின் ஸ்தல மூர்த்தியானவர் சனீஸ்வரலிங்கம், சுவாமியானவர் ராகுவுக்கு அதிபதியாவார். நட்சத்திரம் விசாகமானது குருவுக்கு அதிபதியாகும். மேலும், இக் கோயிலில் சனி பகவான் லிங்க வடிவில் வன்னிமரத்தடியில் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.
இந்தக் கோயிலில் மாதந்தோறும் விசாக நட்த்திரத்தன்று மாலை 5 மணிக்கு சனீஸ்வரலிங்கம், சுவாமிக்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்து வரும் பக்தர்களால் சிறப்பு அபிசேகம், செய்யப்பட்டு அர்ச்சணைகளும், சிறப்பு பூஜைகளும் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது.
இந்த மாதம், செப். 13-ம் தேதி வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு சிறப்பு அபிசேகங்கள் செய்யப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார், கணக்கர் சி. பூபதி, வசந்த் மற்றும் பிரதோச விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.




