பாவூர்சத்தி;ரம்,ஜுலை.6: பாவூர்சத்திரம் பேருந்து நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியினை செல்வமோகன்தாஸ்பாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார் பாவூர்சத்திரம் பேருந்து நிலையத்தில் தென்காசி சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.9.50 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்குழாய் கிணறு அமைத்து, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய் அமைக்கும் பணி நிறைவு பெற்று, அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. செல்வமோகன்தாஸ்பாண்டியன் எம்.எல்.ஏ, தலைமை வகித்து, திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றிய செயலாளர் சங்கரபாண்டியன், நிர்வாகிகள் இளவரசு, ரமே~;, அமல்ராஜ், ராமசாமி (எ) தமிழ்செல்வன், பாலன்புராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Popular Categories



