தமிழக அரசுக்கு சரியான பாடம் புகட்டியுள்ளது மழை என்று நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தது பொருத்தமானது : ராமதாஸ்

Published:

தமிழக அரசாங்கம் சென்னையில் மழைநீர் மற்றும் கழிவுநீர் செல்லும் கால்வாய்களை முறையாக பராமரிக்காததாலும்
ஏரி,குளங்களை ஆக்கிரமித்த பொது மக்களுக்கும் அண்மையில் பெய்த மழை சரியான பாடம் புகட்டியிருக்கிறது என்று நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தது பொருத்தமானது என்று பாட்டாளி மக்கள் கட்சி பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்தெரிவித்துள்ளதாவது :–

சென்னையில் மழைநீர் வடிகால் வசதிகள் மிக மோசமாக பராமரிக்கப்படுவது குறித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சென்னையில் மழைநீர் மற்றும் கழிவுநீர் கால்வாய்களை முறையாக பராமரிக்காத தமிழக அரசுக்கும், ஏரி, குளங்களை ஆக்கிரமித்த மக்களுக்கும் அண்மையில் பெய்த மழை சரியான பாடம் புகட்டியிருக்கிறது.

இதை கருத்து என்று கூறுவதை விட தமிழக அரசுக்கு நீதிபதிகள் தெரிவித்த கண்டனம் என்று கூறுவதுதான் பொருத்தமானதாக இருக்கும்.

சென்னையில் ஏரி, குளங்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட நீர்நிலைகள் இருந்த போதிலும் கடந்த 50 ஆண்டு கால திமுக மற்றும் அதிமுக ஆட்சிகளில் அவை திட்டமிட்டு அழிக்கப்பட்டது, மழை நீரை கடலுக்கு கொண்டு செல்லும் ஆறுகள் மற்றும் கால்வாய்கள் தூர்வாரப்படாதது, மழை நீர் வடிகால்கள் சீரமைக்கப்படாமல் கழிவுநீர் குழாய்களில் மழைநீர் சேர்ந்து ஓட அனுமதிக்கப்பட்டது ஆகியவைதான் சென்னையில் மழை பாதிப்பு அதிகரிக்க காரணம் என்று நான் தொடர்ந்து கூறி வருகிறேன்.

ALSO READ:  சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

அதேநேரத்தில் சென்னையில் ஏரி, குளங்களை ஆக்கிரமித்த மக்களுக்கும் அண்மையில் பெய்த மழை பாடம் புகட்டியிருப்பதாக உயர் நீதிமன்றம் கூறியிருப்பதில் முழு உண்மை இல்லை.

ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் வீடுகளை கட்டி குடியிருப்பது பொதுமக்கள்தான் என்ற போதிலும், ஏரிகளை தூர்த்து வீட்டு மனைகளாக்கி விற்பனை செய்தது தமிழகத்தை கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சி செய்து இரு கட்சிகளைச் சேர்ந்தவர்கள்தான்.

இந்த உண்மை உயர் நீதிமன்றத்திற்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம், ஆனால், பொதுமக்கள் அனைவருக்கும் தெரிந்த உண்மை ஆகும்.

சென்னை போன்ற நகரங்களில் சொந்த வீடு என்பது அனைவருக்கும் வாழ்நாள் கனவாக இருக்கும் நிலையில், அந்தக் கனவை தமிழக ஆட்சியாளர்கள் நிறைவேற்றித் தந்திருக்க வேண்டும்.

சென்னை மாநகரில் எங்கெல்லாம் சட்டவிரோதமாக கழிவுநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்பதைக் கண்டறிந்து சரி செய்ய வேண்டும்; மழை நீர் வடிகால்களுக்கான எல்லைக் கோட்டு வரைபடங்களைத் தயாரித்து அதன்படி வடிகால்களை அமைக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

இதை இதுவரை செய்த தவறுகள், விதிமீறல்கள், ஊழல்கள் உள்ளிட்ட பாவங்களை போக்க கிடைத்த வாய்ப்பாக தமிழக அரசாங்கம் கருத வேண்டும்.

அதுமட்டுமின்றி, சென்னையில் எந்தெந்த பகுதிகளில் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்பதைக் கண்டறிந்து மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் அவற்றை அகற்றவும் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று

மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்தெரிவித்துள்ளார்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img