திருவண்ணாமலையில்  மகா தீபம் ஏற்றப்பட்டது : லட்சக்கணக்கான பக்தர்கள் தீப தரிசனம் செய்தனர்

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள பஞ்சபூதத் தலங்களில் அக்னித்தலமான அருணாச்சலேஸ்வரர் கோயிலில் இன்று மாலை 6 மணிக்கு கோயில் தங்கக் கொடிமரம் எதிரே சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரராகக் காட்சியளிக்க, 2,668 அடி உயரமுள்ள திருவண்ணாமலை மலை மீது மகா தீபம் ஏற்றப்பபட்டது.

மகா தீபத்தை திருவிழாவையொட்டி தமிழகம் மட்டுமின்றி வெளிநாட்டை சேர்ந்த பல லட்சம் பக்தர்கள் குவிந்தனர்.

இன்று அதிகாலை 4 மணிக்கு திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள பஞ்சபூதத் தலங்களில் அக்னித்தலமான அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கோபரணி தீபம் பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் ஏற்றப்பட்டது.

திருவண்ணாமலையில் கடந்த 16ம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் ஒருபகுதியாக கடந்த நவம்பர் 21ம் தேதி வெள்ளித் தேரோட்டமும், 22-ம் தேதி கொட்டும் மழையில் பெரிய தேரோட்டத்துடன் பஞ்ச ரதங்களின் தேரோட்டமும் நடைபெற்றது.

மேலும் இன்று அதிகாலை 4 மணிக்கு தீபவிழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் கோயில் மூலவர் சன்னிதியில் பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் ஏற்றப்பட்டது.

இன்று மாலை 6 மணிக்கு கோயில் தங்கக் கொடிமரம் எதிரே சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரராகக் காட்சியளிக்க, 2,668 அடி உயரமுள்ள திருவண்ணாமலை மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது. பல லட்சம் பக்தர்கள் குவிந்து ஏற்றப்பட்ட மகா தீபதரிசனம் செய்தனர் .