திமுக தலைவர் கருணாநிதியை  நேரில் சந்தித்த மூடு டாஸ்மாக்கை மூடு பாடகர் கோவன்

திமுக தலைவர் கருணாநிதியை மூடு டாஸ்மாக்கை மூடுபாடலை இயற்றி பாடிய கோவன் இன்று சந்தித்து பேசியுள்ளார்.

அப்போது தான் கைது செய்யப்பட்டபோது அதற்கு எதிராக குரல் எழுப்பியதற்காகவும், விடுதலைக்காக வலியுறுத்தியதற்காகவும் கோவன் நன்றி தெரிவித்துள்ளார்.

மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மைய கலைக் குழுவைச் சேர்ந்த கோவன் கடந்த30-10-2015 அன்று தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்த கோவனுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில், சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேசியுள்ளார். சந்திப்பின்போது திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உடன் இருந்துள்ளார்.

மதுஒழிப்பை வலியுறுத்தி சென்னையில் டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெறும் கூட்டத்தில் திமுக பங்கேற்க வேண்டும் என பாடகர் கோவன்
கேட்டுக்கொண்டதாக பரவலாக கூறப்படுகிறது.