.
கோடையை முன்னிட்டு, ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு குடிநீர் வினியோகிக்க, கூட்டுறவு மற்றும் உணவு துறை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில், 35 ஆயிரம் ரேஷன் கடைகள் வாயிலாக மாதம் 2.19 கோடி கார்டுதாரர்களுக்கு, அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கப் படுகின்றன. கைரேகையை பதிவு செய்து பொருட்கள் வழங்குவதால், கடைகளில் தினமும் 150 முதல் 200 பேர் வரை வரிசையில் நின்று பொருட்களை வாங்குகின்றனர்.
தற்போது, கோடை காலம் துவங்கியதை முன்னிட்டு வெயில் சுட்டெரிப்பதால், ரேஷன் கடைகளில் வரிசையில் காத்திருப்போர் சிரமப்படுகின்றனர். அவர்களின் தாகத்தை தீர்க்க, குடிநீர் வினியோகம் செய்ய, கூட்டுறவு மற்றும் உணவு துறை முடிவு செய்துள்ளது.





