கின்னஸ் சாதனை படைத்த ஆமை!

Turtle - 2026

ஜொனாதன் என்ற 190 வயது ஆமை, உலகின் மிக வயதான நில விலங்கு என கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

இது ஒரு அரிய சாதனை என்று நம்பப்படுகிறது. பிரிட்டிஷ் கடல் கடநத பிரதேசத்தின், செயின்ட் ஹெலினா தீவில் உள்ள ஆமை தனது 190வது பிறந்தநாளை 2022ல் கொண்டாடுகிறது.

ரெக்கார்ட்ஸ் வலைத்தளத்தின்படி, ஜொனாதன் 1832 இல் பிறந்ததாக நம்பப்படுகிறது.

‘ஜொனாதன் ஆமையின் வயது, அதன் முதிர்ச்சியின் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது.

ஜொனாதன் 1882 இல் சீஷெல்ஸிலிருந்து, செயின்ட் ஹெலினாவுக்கு வந்தபோது அதற்கு குறைந்தது 50 வயது இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எப்படி பார்த்தாலும் ஜொனாதன் நாம் நினைப்பதை விட வயதானது, ‘என்று ரெக்கார்ட்ஸ் தளம் கூறியது.

மேலும் அதிகாரப்பூர்வ பதிவு, ஜொனாதனை ‘பழைய செலோனியன்’ என்று கூறுகிறது. இது அனைத்து ஆமைகளை உள்ளடக்கிய ஒரு வகை.

ஜொனாதனுக்கு இப்போது, ​​வயதாகிவிட்டதால், அதற்கு வாசனை உணர்வு இல்லை, பார்வையும் இல்லை. ஆனால் ‘அதன் செவித்திறன் சிறப்பாக இருக்கிறது. அனாலும் ஜொனாதன் மனிதர்களின் சகவாசத்தை விரும்புகிறது. அவரது கால்நடை மருத்துவர் ஜோ ஹோலின்ஸின் குரலுக்கு அது நன்றாக பதிலளிக்கிறது’.

ALSO READ:  மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

ஜொனாதனின் கலோரிகள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் சுவடு கூறுகளை அதிகரிக்க, கால்நடை பிரிவு வாரத்திற்கு ஒரு முறை அதற்கு கையால் உணவளிக்கிறது.

முன்னதாக துய் மலிலா என்ற ஆமை குறைந்தது 188 ஆண்டுகள் வாழ்ந்தது கின்னஸ் சாதனையாக இருந்தது. இது, 1777 இல் கேப்டன் குக்’ என்பவரால், டோங்காவின் அரச குடும்பத்திற்கு வழங்கப்பட்டது மற்றும் 1965 இல் இறக்கும் வரை அவர்களின் பராமரிப்பில் இருந்தது என்று தளம் குறிப்பிடுகிறது.

முட்டைக்கோஸ், வெள்ளரி, கேரட், ஆப்பிள் மற்றும் பிற பருவகால பழங்கள் ஜொனாதனின் விருப்பமான உணவுகளாக உள்ளன. அதுக்கு வாழைப்பழமும் பிடிக்கும். ஆனால், அது வாயில் ஓட்டிக் கொள்ளும். கீரையும் மிகவும் பிடித்தமானவை’, என்று ஜொனாதனின் பராமரிப்பாளர்கள் கூறினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Entertainment News

Popular Categories