தமிழக சட்டமன்ற தேர்தல் 2016-ல் முதலமைச்சர் வேட்பாளர் கலெக்டர் சகாயமா ??? “ரமணா” பட பாணியில் வேலைகள்.!

 

அட ஆமாங்க, எவ்வளவு நாள் தான் “செய்வாங்க செய்வாங்கன்னு” திராவிடக்கட்சிகளுக்கும்,அவர்களுக்கு கூட்டணியா இருந்த தோழமை கட்சிகளுக்கும் தமிழ்நாட்டு மக்கள் மாறி மாறி ஓட்டு போட்டுட்டு ஏமாந்து கொண்டே இருப்பாங்க.நம்ம டெல்லியில் மக்கள் ஒரு மாற்றத்துக்காக எப்படி அரவிந்த் கேஜிரிவாலை தேர்ந்தெடுத்தார்கள்.

அரவிந்த் கேஜ்ரிவால் கூட அண்ணா ஹசாரேவின் லோக்பால் பிரச்சனைல மக்களுக்கு அறிமுகமானார். இன்று அவர் நடத்தும் ஆட்சியில் கூட பிரச்சனைகள் மலிந்து தான் இருக்கு.நேற்றைக்கு கூட கலவர வழக்கில் ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆனா நம்ம தமிழ்நாட்டுல “லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்” இந்த வார்த்தையை கேட்டாலே நம்ம மனசுக்குள் சட்டுன்னு ஞாபகம் வருபவர் சகாயம் ஐஏஎஸ். அவர் சென்ற இடமெல்லாம் நேர்மையாக இருந்ததன் விளைவு பல இட மாற்றங்கள்.சமீபத்தில் நஷ்டத்தில் இயங்கிய கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் நுழைந்த வேகத்துக்கு இரண்டு தேசிய விருகளை பெற்றுத்தந்தவர். புதிய மாற்றங்களை உருவாக்கியவர்.தற்பொழுது மதுரை கிரைனட் முறைகேடுகள் பற்றி விசாரிக்கும் அதிகாரியாக பொறுப்புவகித்து வருகிறார்.

இந்த நிலையில் தமிழக அரசுக்கு மதுரை கிரானைட் முறைகேட்டில் ரூ.1.06 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சகாயத்தின் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் சினிமா நடிகர்களுக்கு மட்டுமல்ல இவருக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமாக லட்சக்கணக்கான இளைஞர்கள்இவருக்கு ஆதரவளித்து வருகிறார்கள். இவருக்கு சில சமூக விரோதிகளால் மிரட்டல் வரும்போதெல்லாம் சமூக வலைதளங்களில் “உங்களுக்கு துணையாக நாங்க இருக்கோம்” என்று ஒன்று திரள்கிறார்கள்.

இந்த நிலையில் தற்பொழுது ஒரு செய்தி பெரிய அளவில் உலா வருவது என்னவென்றால் “ரமணா” பட பாணியில் யாரெல்லாம் நேர்மையான அரசு அதிகாரிகளாக செயல்பட்டு ஓய்வுபெற்றவர்களை தொகுதி வாரியாக சேகரித்து, வரும் தமிழக சட்டமன்ற 2016 தேர்தலில் அவர்களை தொகுதி வேட்பாளராகவும் கலெக்டர் சகாயத்தை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று முயற்சி நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

ஒரு வேலை இந்த தகவல் உண்மையென்று இருந்தால் நம் தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு நல்ல நேர்மையான தலைமை அமையும் என்பதில் துளி அளவும் ஐயமில்லை.

 

 – கவின் –

Donate to Dhinasari News! Independent journalism that speaks truth to power and is free of corporate and political control is possible only when people start contributing towards the same. Please consider donating towards this endeavour to fight fake news and misinformation.