மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் கைது

 

விருதுநகர் மாவட்டம் அருகேயுள்ள மல்லாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியரை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர்.

மல்லாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிபவர் முத்துராஜ்(47). அவரது வகுப்பில் பிளஸ்-2 படிக்கும் சில மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகின்றது.

இதுகுறித்து ஒரு மாணவி பெற்றோருடன் அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீஸார் ஆசிரியர் முத்துராஜைக் கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள்