இந்தியாவின் முன்னணி கண் டாக்டரும் அரவிந்த் கண் மருத்துவமனை நிறுவுனருமான கோவிந்தப்பா வேங்கடசாமியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு கூகுள் டூடில் வெளியிட்டு கௌரவப்படுத்தியுள்ளது.
கோவிந்தப்பா வேங்கடசாமி நாயுடு, 1918ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி, விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டத்தில் உள்ள வடமலாபுரத்தில் பிறந்தார். பார்வைக் குறைபாடு, குருட்டுத்தன்மையை அகற்ற தம் வாழ்நாளை அர்ப்பணித்தவர்.
புகழ்பெற்ற அரவிந்த் கண் மருத்துவமனையை நிறுவி, அதன் மூலம் 6.8 மில்லியன் கண் அறுவை சிகிச்சைகள் நடைபெற்று 55 மில்லியன் பேர் பார்வைத் திறன் பெற்றுள்ளனர். அவருடைய பிறந்தநாள் நூற்றாண்டை கூகுள் இந்தியா டூடுள் வெளியிட்டு கொண்டாடுகிறது.




