ரூ.4 ஆயிரம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வெள்ள நிவாரண நிதியாக முதலமைச்சர் அறிவிப்பு

 
கனமழை காரணமாக எங்கு பார்த்தாலும் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாகவே காட்சியளிக்கிறது. கடந்த ஒரு மாதமாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக புதுவை மாநிலம் பாதிக்கபட்டு உள்ளது.
 
மழை வெள்ளநிவாரணத்தை பார்வையிட்ட பின் புதுச்சேரி, காரைக்காலில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.4 ஆயிரம் நிவாரண நிதி வழங்க உள்ளதாக முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். முற்றிலும் சேதம் அடைந்த கல்வீடுகளுக்கு ரூ.35 ஆயிரம் வழங்கப்படும் என்று செய்தியாளர்களிடம் அறிவித்துள்ளார்.
 
மேலும் குடிசை வீடுகளுக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் தெரிரிவித்துள்ளார். நிவாரண பணிக்கு கூடுதலாக ரூ.200 கோடி மத்திய அரசிடம் கேட்க உள்ளதாக புதுவை மாநில முதலமைச்சர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்