சென்னையில் மீ்ண்டும் கனமழை : மக்கள் அதிர்ச்சி

 
 
சென்னையில் மீ்ண்டும் கனமழை கனமழை பெய்து வருவதால், மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
 
கடந்த 2 தினங்களாக மழை விட்டுள்ளதால் சென்னையில் தேங்கிய வெள்ளம் வடசென்னை, மத்திய சென்னை பகுதிகளில் உட்பகுதி சாலைகள் மற்றும் தெருக்களில் தேங்கி நின்ற வெள்ளம் வடிந்து விட்டது.கூவம் கரையோரம் மற்றும் அடையார், பகுதிகளில் வீடுகள் மற்றும் தெருக்களில் புகுந்த வெள்ளம் வடிந்து வருகிறது. ஓரிரு நாட்களில் அந்த பகுதியில் வெள்ளம் வடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சென்னையில் பல பகுதிகளுக்கு வழக்கமான மாநகர பேருந்து சேவை இயக்கப்பட்டது.
 
சென்னை மாநகரில் இயல்பு நிலை மெல்ல மெல்ல திரும்பி வரும் நிலையில் மைலாப்பூர், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, தாம்பரம், ஈக்காட்டுதாங்கல், முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் சற்று வடிந்திருந்த நிலையில் மீ்ண்டும் மழை துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.