தமிழக அரசு வெள்ள நிவாரணப் பணிகள் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை : ராமதாஸ்

 
 
சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் ஏறத்தாழ நூறாண்டு காலத்தில் கண்டிராத கடும் மழை பெய்துள்ளது.
 
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நடைபெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் சொல்லிக் கொள்ளும்படியாக எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை.
 
லட்சக்கணக்கான மக்கள் வீடு இழந்து, உடைமைகளை இழந்து, உண்ண உணவின்றித் தவித்து வருகிறார்கள். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கித் தவிக்கும் மக்களில் பெரும்பான்மையானோர், இன்னும் மீட்கப்படவில்லை.
 
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நிவாரண உதவிகளை உடனடியாக தமிழக அரசு வழங்க வேண்டியது அவசியம். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 10,000 ரூபாய் வழங்க வேண்டும். பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார் .