ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே அரசு பேருந்தும் கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ராமேஸ்வரத்தில் இருந்து தென்காசி சென்ற அரசு பேருந்து திருப்புல்லாணி அருகே தூத்துக்குடியிலிருந்து உப்பூர் சென்ற கன்டெய்னர் லாரி மீது மோதியது. அரசுப் பேருந்தில் இருந்த பள்ளி மாணவிகள் 5 பேர் உட்பட 10 பேர் காயமடைந்தனர். ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க பலியானார்.
தகவலறிந்த தீயணைப்பு துறையினர் மற்றும் மருத்துவ குழுவினர் காவல் துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பேருந்தில் சிக்கிக் கொண்ட ஓட்டுனர் அருள் சேவியர் மற்றும் பள்ளி மாணவி முனீஸ்வரி ஆகியோரை நீண்ட நேர போராட்டத்திற்குப் பின்னர் தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.




