நெல்லை: நெல்லை மாவட்ட இந்து முன்னணி நிர்வாகிகளுக்கு கொலை மிரட்டல் விடுக்கப் பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட இந்து முன்னணி பொதுச் செயலாளர் மாரியப்பன் , துணை தலைவர் பால்ராஜ் ஆகியோருக்கு வாட்ஸ் அப்பில் கொலை மிரட்டல் விடுக்கப் பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
இந்த மிரட்டலை அடுத்து, இருவரும் விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்களது புகாரின் பேரில் கொலை மிரட்டல் குறித்து விகேபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


