நெல்லை மாவட்டம் திருக்குற்றாலத்தில் மலைப் பகுதிகளில் கனத்த மழை பெய்து வருவதால், அருவிகளில் நீர்ப் பெருக்கு அதிகரித்துள்ளது.
குற்றாலத்தைச் சுற்றியுள்ள பகுதிகள், தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இது போல், அருவிப் பகுதியிலும், மலைப் பகுதியிலும் தொடர்ந்து மழைப் பெய்து வருகிறது. இதனால் அருவிகளில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதை அடுத்து குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை விதிக்கப் பட்டது.
இன்று காலை அருவியில் நீர் மிதமான அளவில் சுமாராக விழுந்தது. முற்பகல் 11.30க்கு சாதாரணமாக இருந்தது அருவி. பின்னர் பெய்த மழையில் அருவியில் நீர் திடீரெனப் பெருகியது. மதியம் 3 மணியளவில் அருவியில் நீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. இதை அடுத்து அருவியில் குளிக்க தடை விதிக்கப் பட்டது.




