செங்கோட்டை: திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ளது புகழ் பெற்ற புளியறை ஸ்ரீ தட்சிணாமூர்த்தி திருக்கோயில். தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற தட்சிணாமூர்த்தி திருத்தலமாகத் திகழ்கிறது.
இங்கே நந்திக்கும் மூலவரான ஸ்ரீ சதாசிவ மூர்த்திக்கும் நடுவில் தனியாக சந்நிதி கொண்டிருக்கிறார் ஸ்ரீ தட்சிணாமூர்த்திப் பெருமான். எனவே இங்கே பெருமானை சாந்தப் படுத்திய மௌன குருவாக வீற்றிருக்கும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி பெருமானின் சந்நிதியில், குரு பெயர்ச்சி விழா இன்று இரவு கோலாகலமாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன.




