ஜெயலலிதா அரசியல்வாதியா ? விளம்பரவாதியா ? : கேள்வி எழுப்பும் பொதுமக்கள்

 
 
தமிழக அரசு சார்பில் இலவசமாக இயக்கப்படும் பேருந்துகளில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் படம் ஒட்டப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என பொதுமக்கள் பரவலாக கண்டனகுரல் எழுப்பி வருகின்றனர்.
 
மேலும் தமிழக பொதுமக்கள் கூறுவதாவது :-
 
அண்டை மாநிலமான கேரள அரசாங்கம் கூட தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ள பாதிப்பால் தமிழமக்களின் மீது பெருத்த மனிதாபத்துடன் 60 இலவச பேருந்துககளை தமிழகத்தில் இயக்கிவருகிறது.
 
கேரள அரசாங்க இலவச பேருந்துகளில் கூட கேரள மாநில முதலமைச்சரின் படம் ஒட்டப்படவில்லை.மேலும் தமிழக அரசு பேருந்து பொது மக்களின் வரிபணத்தில் வாங்கப்பட்டது. ஜெயலலிதாவின் சொந்த பணத்தில் அல்ல,
 
இந்த நிலையில் மக்களின் வரிப்பணத்தில் தமிழக அரசு பேருந்திலும், தமிழக அரசாங்கத்தினால் கொடுக்கப்படும் அணைத்து நலதிட்டங்கள் மற்றும் அரசாங்க விளம்பரங்களில் முதலமைச்சர் ஜெயலலிதா இலவச சுய விளம்பரம் தேடிகொள்ள என்ன உரிமையுள்ளது ? என்றும் ஜெயலலிதா அரசியல்வாதியா ? அல்லது விளம்பரவாதியா ? எனும் கேள்வியுடன் பொதுமக்கள் பரவலாக கண்டனகுரல் எழுப்பி வருகின்றனர் .