2000 உணவு பொட்டலம் கேட்டு மிரட்டி அட்டூழியம் செய்த அதிமுக கட்சியை சேர்ந்த கவுன்சிலரின் கணவர்

 

மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த அனைத்து இடங்களிலும் உடனடியாக உதவி செய்தது யார் என்றால் ஜாதி, மத, வேறுபாடுகள் இன்றி பொதுநல நோக்கத்தில் பல்வேறு தன்னார்வ தொண்டு அமைப்புகள்தான்.

வெளி மாவட்டங்களில் இருந்து உணவு மற்றும் தேவையான அத்தியாவசியப் பொருட்களை தொடர்ந்து கொண்டு சென்றும், இலவசமாக வழங்கியும் சேவையாற்றி வருகின்றனர். பல தன்னார்வ தொண்டு அமைப்புகள் வெள்ளத்தால் பாதிப்படைந்த பொது மக்கள் இருக்கும் பகுதியிலேயே உணவுகளை தயார் செய்து மனித நேயத்துடன் வழங்கி வருகின்றனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெளியூரிலிருந்து கொண்டு வரப்படும் நிவாரணங்களை, உள்ளூரில் உள்ள சமூக விரோதிகள் தடுத்து எடுத்துச் செல்வதாக பல இடங்களில் புகார் எழுந்துள்ளது.

பெரும்பாலும் அதிமுக கட்சியை சேர்ந்த ஒரு சிலர் அராஜகமாக நிவாரணப் பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களை அந்தந்த ஊர்களில் வழிமறித்து திசை திருப்பி அனுப்புகின்றனர் என பரவலாக சொல்லப் படுகிறது. கையில் கோலுடன் மிரட்டி வாகனங்களை வழிமறிக்கும் அவர்களை காவல்துறையும் கண்டு கொள்வதில்லை என்கின்றனர். காரணம் அவர்கள் அந்த ஊரில் செல்வாக்கான மனிதர்களாம்.

பொதுநல நோக்கம் இன்றி லஞ்சம் பெற்றும், ஊழல் செய்தும், பொதுமக்களின் வரிப் பணத்தை அரசாங்க பொதுநல திட்டங்களுக்கு முறையாக செலவிடாமல் கொள்ளையடித்து சொத்து சேர்க்கும் பேராசையில் தொடர்ந்து சுற்றி திரிந்து வரும் சுயநல அரசியல்வாதி கரைவேட்டி கொள்ளையர்களே அவர்கள் என பொதுமக்களால் குற்றம் சாட்டப்படுகிறது.

அவ்வாறு பொதுமக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்து சொத்து சேர்த்து வைத்ததில் இருந்து சிறிய தொகையை எடுத்துக் கூட பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்ய மனம் இல்லாத சுயநல அரசியல்வாதி சமூக விரோதி கரைவேட்டி கொள்ளையர்களும் வெட்கமில்லாமல் உலகில் வலம் வந்து கொண்டுதான் உள்ளனர்.

அவ்வாறு அந்தந்த மாவட்டத்தில் பாதிப்படைந்தவர்களுக்காக பொதுமக்கள் வழங்கிய நிவாரணப் பொருட்கள்மீதும் ஜெயலலிதா புகைப்படத்தை ஒட்டி இலவச சுய விளம்பரம் தேடுவது தொடர்ந்து அரசியல் ஆதாயம் அடையும் செயல் என தமிழக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பொதுமக்கள் வழங்கிய நிவாரணப் பொருட்கள் மீதும் ஜெயலலிதா புகைப்படத்தை ஓட்டி இலவச சுய விளம்பரம் தேடிக்கொள்வதற்கு என்ன உரிமையுள்ளது? எனும் கேள்வியுடன் புகைப்பட பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் ஓட்டு கேட்டு வந்தால் செருப்பாலும், துடைப்பத்தாலும் அடிப்போம் எனும் மக்கள் குமுறலும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டு இருக்கும் அதிமுக கட்சியின் சார்பில் சொந்த செலவில் வெள்ளத்தால் பாதிப்படைந்தவர்களுக்கு என்ன நிவாரண உதவி செய்தார்கள் எனும் கேள்வியை பலர் எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை மாநகரின் ஒரு பகுதியில் தன்னார்வ தொண்டு அமைப்பினர் மனித நேயத்துடன் வெள்ளத்தால் பாதிப்படைந்தவர்களுக்கு பொதுமக்கள் இருக்கும் பகுதியிலேயே 5000 உணவுப் பொட்டலங்களை தயார் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வந்துள்ளதாம்.

அதிமுக கட்சியை சேர்ந்த அந்த பகுதி கவுன்சிலரின் கணவர் பார்த்திபன் என்பவர் அதிமுக கட்சியின் சார்பில் வழங்க 2000 உணவு பொட்டலங்களை தன்னார்வ தொண்டு அமைப்பினரிடம் கேட்டு மிரட்டி அட்டூழியம் செய்ததாக சமூக ஊடகங்களில் தகவல் பதிவிடப்பட்டு காணொளி வைரலாக பரவிவருகிறது.

வைரலாக பரவிவரும் அந்த காணொளி இந்த செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.