ரஜினிக்கு ரசிகர் எழுதிய விரக்தி மடல்

திரு.ரஜினி அவர்களுக்கு , இதுவரை உங்கள் ரசிகனாக இருந்ததற்கு வெட்கப்படும் மற்றும் உங்கள் ஒருதுளி வியர்வைக்கு பல பவுன் கொடுத்த தமிழ்நாட்டின் ஒருவனாகிய நான் சில கருத்துக்களை உங்களுக்கு சொல்ல நினைக்கிறேன். 

நீங்கள் உங்கள் மகள்கள் திருமணத்திற்கு எங்களை போன்ற அடுத்தட்டு ரசிகர்களை அழைக்காமல் , அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களை மற்றும் அழைத்து எங்களை அவமானபடுத்தியதை விகடன் பத்திரிக்கை தெளிவுபடுத்தியபோது கூட அது உங்கள் குடும்ப விசயம் என்றுஅதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் விட்டு விட்டோம் . அப்போதும் உங்கள் ரசிகனாகவே இருந்தோம்.

 

குசேலன் படத்தில் எப்போதுதான் அரசியலுக்கு வருவீர்கள் ? , வரும்போது சரியாய் வருவேன் என்று பல ஆண்டுகளாக எல்லா திரைபடங்களிலும் சொல்லி வருகேறீர்களே என்று கேட்டதற்கு , அது சினிமா வசனமாக இயக்குனர் சொல்லிக்கொடுத்தது , அதை நீங்கள் நம்பினால் அதற்கு நான் என்ன செய்வது  என்று சொல்லி எங்களை அவமானபடுத்தியதை கூட அது உங்கள் சொந்த விசயம் என்று அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் விட்டு விட்டோம் . அப்போதும் உங்கள் ரசிகனாகவே இருந்தோம்.

 

பாபா படம் வெளியானபோது திரு. ராமதாஸ் அவர்கள் பொதுவாக பேசும் போது சொன்ன ஒரு கருத்தை, உங்களை சொன்னதாக எங்களையும் கிளப்பிவிட்டு அப்போதைய நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் கட்சிக்கு எதிரான அலை வீசிகொண்டிருக்கும்போது எதிர் கூட்டணியில் இருந்து 6 தொகுதிகளில் போட்டயிட்ட பாமக வை தோற்படிப்பேன் என்று கோபத்துடன் சவால் விட்டது மட்டுமின்றி  , இந்திய அரசியல் சட்டதிட்டங்களை மீறி ஓட்டுசாவடியில் இருந்து வெளியே வரும்போது இரட்டை விரலை அசைத்து கொண்டு வெளியே வந்தீர்கள். அதில் மக்கள் உங்களை ஒட்டு மொத்தமாக ஓரங்கட்டி 6 தொகுதிகளிலும் பாமகவை வெற்றிபெற வைத்தார்கள். 

 

பின்னர் உங்கள் ஓடாத திரைபடங்களை பலமுறை திருப்பித்திருப்பி பார்த்து , அந்த படங்களை ஓரளவிர்காவது உங்கள் மானம் காக்க ஓடவைத்த எங்களை ஓரம்கட்டி விட்டு யாரை எதிரியாக அறிவித்தீர்களோ அவரின் மகன் திரு,அன்புமணிராமதாசை உங்கள்வீட்டுத் திருமணத்திற்கு அழைத்து வந்தீர்கள். 1996 ல் ஆளும் கட்சிக்கு  எதிராக பேசி எங்களையும் அக்கட்சி தொண்டர்களின் ஏச்சு பேச்சுக்கு ஆள்ளாக்கி விட்டு 2001 ல் அதே கட்சி பதவி ஏற்பில் முதல்ஆளாக கலந்துகொண்டு எங்களை அவமானபடுத்தியதை கூட அது உங்கள் சாதுர்யம் என்று அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் விட்டு விட்டோம் . அப்போதும் உங்கள் ரசிகனாகவே இருந்தோம்.

 

நீங்கள் உடல்நிலை சரியில்லாமல் சிங்கப்பூரில் எலிசெபத் மருத்துவமனையில் இருந்தபோது , மனம் துடிதுடித்து எங்கள் உடலை வருத்திக்கொண்டு எல்லா வேண்டுதல்களையும் செய்து , கடவுள் அருளால் நீங்கள் உடல்நலம் தேறியபோது எல்லையாயில்லா ஆனந்தம் அடைந்து உங்களை பார்க்க நினக்கபோது , அனைவரும் வந்து பார்த்தால் உங்களுக்கு தொற்று ஏற்படும் என்று சொல்லப்பட்டு திருப்பி அனுப்பப்படும்போது கூட அது உங்கள் உடல்நலம் குணமானால் போதும் என்று அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் விட்டு விட்டோம் . அப்போதும் உங்கள் ரசிகனாகவே இருந்தோம்.

 

ஆனால் கிட்டத்தட்ட 50 லட்சம் பேர் பாதிக்கப்பட்ட இந்த வெள்ளநிவாரணத்திற்காக 10 லட்சத்தை ஒரு கடமைக்காக பிச்சை போடுவதுபோல , அதுவும் அதில் வருமானவரி பிடித்தம் இல்லாமல் இருப்பதற்காக உங்கள் அறக்கட்டளை மூலமாக அதுவும் நடிகர் சங்கம் மூலமாக அளித்ததை எப்படி யோசித்தாலும் எங்களின் யார் மனமும் ஏற்க மறுக்கிறது.

 

உங்கள் 20 வருட ரசிகனாக தலைவணங்கி தங்கள் கால்பிடித்து கேட்டுகொள்ளுகிறேன். தயவுசெய்து 10 லட்சத்தை திருப்பி வாங்கி கொள்ளுங்கள் . உங்களின் இந்த அவமானபடுத்தலை எங்களாலும் சரி , எந்த தமிழானாலும் சரி முற்றிலும் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. இதற்கான எந்த விளக்கமும் கொடுத்து இனியும் எங்களை ஏமாற்ற நீங்கள் தயவுசெய்து முயற்சிக்கவேண்டாம். 

 

இனியாவது உங்கள் குருவான சுவாமி ராகவேந்தரின் உண்மையான பக்தரான திரு.ராகவா லாரன்சை பார்த்தாவது மக்கள்பணி என்றால் என்னவென்று கற்றுக் கொள்ள இனியாவது முயற்சியாவது செய்யுங்கள்.

 

உங்களின் கபாலி பட தோல்வி என்பது 100 சதவிகிதம் உறுதியான ஒன்று. உங்கள் அவமானபடுதல்களுக்கு உங்கள் ரசிகர்களாகிய நாங்களும் , ஒட்டுமொத்த தமிழர்களும் கபாலி பட வெளிவரும்போது நல்ல பதிலடி கொடுப்போம்.

 

அன்பு ரஜினி ரசிகர்களுக்கு உளமார்ந்த வேண்டுகோள் , உங்களுக்கு மனிதநேயம் , தமிழ்மக்கள் மீது உண்மையான பாசம் , இதயம் என்று ஒருவேளை ஒன்று இருந்தால் நான் மேற்சொன்ன அனைத்தையும் நன்கு படித்து ஆராய்ந்து சரி எனப்பட்டால் உடனடியாக ரசிகர்மன்றங்களை இனியும் அவரை நம்பி ஏமாறாமல் கலைத்து விடுமாறு கேட்டு கொள்கிறேன்.

 

இப்படிக்கு

 

உங்கள் ரசிகனாக இத்தனை நாள் இருந்ததற்காக வெட்கித்தலைகுனியும்  ஒரு தமிழன்