அரசு புறக்கணிப்பால் பாதுகாப்பின்றி புஷ்கர படித்துறைகள்: பொன்.ராதாகிருஷ்ணன் வேதனை

Published:

pon radhakrishnan - 2026

அம்பை: நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் தாமிரபரணி மஹாபுஷ்கரம்  இன்று காலை தொடங்கியது. இதற்காக பாபநாசத்துக்கு வந்திருந்தார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர்,  தமிழக அரசு இந்த மஹாபுஷ்கர திருவிழாவை புறக்கணிப்பதாகவும் சரியான பாதுகாப்பின்றி படித்துறைகள் இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், பெண்களுக்கான சரியான பாதுகாப்பு வசதி, கழிப்பிட வசதி எதுவும் அமைத்துக் கொடுப்பதற்கு இந்த அரசு முயற்சி எதுவும் செய்யவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.

144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் தாமிரபரணி மகாபுஷ்கர விழா இன்று காலை தொடங்கியது. பக்தர்கள், பொதுமக்கள் ஆற்றில் புனித நீராடி வழிபாடு செய்தனர். வரும் 22-ஆம் தேதி வரை இந்த புஷ்கர விழா நடக்கிறது. பாபநாசம் முதல் தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் வரை பக்தர்கள் நீராட 143 படித்துறைகளில் பக்தர்கள் நீராட ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

 

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img