ரஜினிகாந்த்திம் நடிப்பில் உருவாகிவரும் பேட்ட படத்தின் படப்பிடிப்பு நேற்று முடிவடைந்தது. இதை அடுத்து அவர் வாராணசியில் இருந்து சென்னை திரும்பினார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், சபரிமலைக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தாம் வரவேற்பதாகவும், அதே நேரம் ஐதீகம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.
#மீடூ என்பது பெண்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும்; பெண்களும் அதனை தவறான வழியில் பயன்படுத்தக் கூடாது என்று கூறினார் நடிகர் ரஜினிகாந்த் #MeToo




