பட்டாசு தீபாவளி அன்று காலை மற்றும் மாலை 2 வேளைகளில் பட்டாசு வெடிக்கலாம் என்று தமிழக அரசு அரசு அறிவித்துள்ளது. அதன்படி காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை வெடிக்கலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும் பட்டாசு தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு பல்வேறு நிபந்தனைகளையும் விதித்தது.
இந்நிலையில் பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் வழங்கக் கோரி, தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் 2 மணி மணி நேரம் மட்டுமே வெடிக்க வேண்டும் என்றும், எந்த நேரம் வெடிக்கலாம் என்று தமிழக அரசே முடிவெடுத்து கொள்ளலாம் என்றும் தீர்ப்பளித்தது. இதனையடுத்து பட்டாசு வெடிக்கும் நேரம் குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை வெடிக்கலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
பொதுமக்களுக்கு வேண்டுகோள்
குறைந்த ஒலியுடன் குறைந்த மாசுப்படுத்தும் தன்மை கொண்ட பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. தீபாவளியை முன்னிட்டு பட்டாசு வெடிப்பதற்கான வழிமுறைகளை விளக்கி அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசு வெடிக்க முயற்சிக்கலாம் என்றும், அதிக ஒலி எழுப்பும் சரவெடிகள் வெடிப்பதை பொதுமக்கள் தவிர்ப்பது நல்லது என்று தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள், அமைதி காக்கும் இடங்களில் பட்டாசு வெடிக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிசைப்பகுதிகள், எளிதில் தீப்பிடிக்கும் இடங்களில் வெடிக்க வேண்டாம் என்றும், விபத்தில்லா, மாசு இல்லாத தீபாவளியை கொண்டாடுமாறும் தமிழக அரசு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.




