தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து பாக்யராஜ் ராஜினாமா செய்த நிலையில், அவரது ராஜினாமாவை ஏற்க மறுத்து கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.
சர்கார் திரைப்பட கதை திருட்டு விவகாரத்தில் சில பிரச்னைகளை சந்தித்ததாக தெரிவித்துள்ள பாக்யராஜ், தேர்தலில் நிற்காமல் கிடைத்த பொறுப்பில் இருந்து விலகி முறைப்படி தேர்தலில் வென்று பொறுப்பேற்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பாக்கியராஜின் பதவி விலகலை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் ஏற்க மறுத்துள்ளது. சங்கத்தின் பொதுச்செயலாளர் மனோஜ்குமார், பாக்யராஜுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவரது பதவி விலகலை நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கு தொலைபேசியில் தெரிவித்த போது அனைவரும் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர் என்று கூறியுள்ளார்.
இது குறித்து மனோஜ் குமார் எழுதியுள்ள கடிதத்தில்…
தாங்கள் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக கொடுத்த கடிதத்தை அனைத்து நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கு தொலைபேசியில் தெரிவித்தபோது அனைவரும் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர் மேலும் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் உங்களது ராஜினாமாவை ஏற்றுக் கொள்வதில்லை என்றும் நீங்களே தலைவராக தொடர வேண்டும் என்று அனைவரும் தொலைபேசி மூலம் தெரிவித்த கருத்தை செயற்குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டு விட்டது

எனவே எப்போதும் போல தாங்களே தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக தொடர்கிறீர்கள் என்பதை இதன் மூலம் உங்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்
இப்படிக்கு மனோஜ்குமார் – என்று குறிப்பிடப் பட்டிருந்தது.




