சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவுவதற்காக சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் ஒரு முடிவினை அறிவித்திருக்கிறது. சபரிமலை குறித்த விவகாரம் கொழுந்து விட்டு எரியும் சூழலில், மாநில அரசு சபரிமலை பயணத்துக்கு பல்வேறு முட்டுக் கட்டைகளை ஏற்படுத்தி வருகிறது.
சபரிமலை பக்தர்களிடம் இருந்து பெருமளவில் பணத்தை மட்டும் பெற்றுக் கொண்டு வளம் கொழிக்கும் தேவஸ்தானம், தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பதில் அக்கறை காட்டுவதில்லை. இந்நிலையில், நிலக்கல்லில் இருந்து பம்பை செல்ல அரசு பேருந்துகளையே பக்தர்கள் பயன்படுத்த வேண்டியுள்ளது. ஆனால் அதற்கு வசூலிக்கப் படும் கட்டணம் மிக அதிகம். மேலும், பேருந்துகள் பற்றாக்குறை என்பதால், கடும் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் செல்ல வேண்டிய சூழல்!
இந்நிலையில், அந்த பேருந்து இயக்கத்தை தாங்களே இலவசமாக செய்து தருவதாக சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் ஒரு கடிதத்தில் தெரிவித்துள்ளது.
திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவருக்கு சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் எழுதியுள்ள கடிதத்தில்…
கேரள அரசுப் பேருந்துகள் நிலக் கல்லில் இருந்து பம்பைக்கு விடப்படுபவற்றில், மிக அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப் படும் விவகாரம் மற்றும் பிரச்னைகள் குறித்து விவாதித்ததாகவும், இது