ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர முயற்சித்த இந்திய மாணவர்கள் 3பேர் கைது

 
 
ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சமீபத்தில் இந்திய இளைஞர்கள் பலர் சேர முயற்சிக்கின்றனர்.தமிழகத்திலும் சிலர் ஐ.எஸ். இயக்கத்தில் சேர முயற்சித்து காவல் துறையினரிடம் சிக்கினர். அதே போல் புனேவைச் சேர்ந்த மாணவியும், ஜம்மு காஷ்மீரில் 11 சிறுவர்கள் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர முயன்றதால் பிடிபட்டனர்.
 
இந்த நிலையில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் சேர 60 இளைஞர்கள் முயற்சி செய்து வருவதாக ஐதராபாத் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
 
அதன் அடிப்படையில் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் பி.டெக் மாணவர்களான ஐதராபாத்தைச் சேர்ந்த அப்துல் பாஜித், சையத் உமர் பாருக் உசைனி, மாஜ் உசைன் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் சேர வீட்டில் இருந்து வெளியேறி நாக்பூர் சென்றனர். அங்கிருந்து விமானம் மூலம் காஷ்மீர் சென்று எல்லை தாண்ட திட்டமிட்டது தெரிய வந்தது.
 
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஐதராபாத் போலீசார் 3 மாணவர்களையும் போலீசார் கைது செய்தனர்.
கைதான 3 பேரும் சிமி தீவிரவாத இயக்கத்தின் தேசிய தலைவராக செயல்பட்ட சலாவுதின் என்பவரின் நெருங்கிய உறவினர்கள் என்பது தெரிய வந்தது.
 
தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் 3 மாணவர்களைக் காணவில்லை என புகார் கூறப்பட்ட நிலையில், நாக்பூர் அம்பேத்கர் விமான நிலையத்தில் ஸ்ரீநகர் செல்வதற்காக காத்திருந்த 3 மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து அனைத்து விமான நிலையங்களும் காவல் துறையின உஷார் படுத்தப்பட்டுள்ளனர்,
 
 
 
 
 
 
 
 
.