ஊரையெல்லாம் திருடன் என பேசும் விஜயகாந்திற்கு மனநிலை பாதிப்பா ? தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்

 
விஜயகாந்தின் செயல்பாடுகள் அவர் நல்ல மனநிலையில் தான் உள்ளாரா? அவருக்கு மனநிலை பாதிப்பா? என்பதை சந்தேகிக்க வைத்துள்ளது என தேமுதிக அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
 
சென்னை,மத்திய கைலாஷ் பகுதியில் நேற்று தேமுதிக சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது. அதற்கு வந்த விஜயகாந்த் செய்தியாளர்கள் ஒருவர் கேட்ட கேள்வியால் ஆத்திரமடைந்த விஜயகாந்த், செய்தியாளர்களை நோக்கி காரித் துப்பி, தரக்குறைவாக பேசினார். விஜயகாந்தின் இந்த செயலுக்கு பத்திரிகையாளர்கள் மத்தியில் எதிர்ப்பும், கண்டனமும் வலுத்து வருகின்றன.
 
இந்நிலையில், விஜயகாந்தின் இந்த நடவடிக்கை குறித்து தேமுதிக அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர் சுந்தர்ராஜன் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில்,விஜயகாந்தின் செயல்பாடுகள், அவர் நல்ல மன நிலையில் தான் உள்ளாரா என, சந்தேகிக்க வைத்துள்ளது. எனவே, நல்ல மன நல நிபுணரை வைத்து, அவர் மன நிலையை சோதிக்க வேண்டு்ம்.
 
விஜயகாந்த், மனிதர்களை மனிதர்களாக மதிப்பதில்லை. காரணம், அவர் தன் வீட்டில் மிருகங்களை தான் வளர்க்கிறார். அதனால், அவருக்கு அந்த குணம் ஏற்பட்டு விட்டது என நினைக்கிறேன்.
 
ஊரையெல்லாம் திருடன் என பேசும் விஜயகாந்தின் ஒவ்வொரு நடத்தையும் எனக்குத் தெரியும். அவர் தொடர்ந்து இதே போல பேசிக் கொண்டிருந்தால், அவரின் கடந்த கால செயல்பாடுகள் அனைத்தையும் ஆதாரங்களுடன் விமர்சிக்க வேண்டியிருக்கும்.
 
இப்படிப்பட்ட மனிதரை, அரசியல் ரீதியில் வளர்த்து விட்ட பாவத்தை, எந்த காரியம் செய்து துடைப்பது என தேடிக் கொண்டிருக்கிறேன் என தேமுதிக அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர் சுந்தர்ராஜன் சட்டமன்ற உறுப்பினர் கூறியுள்ளார்.